Latestமலேசியா

8 வயதில் எழுத்தாளர்; கிரிஷ் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்

ஜோகூர் பாரு , நவ 18 – தனது புத்தக விற்பனையின் வாயிலாக ஈட்டப்பட்ட பணத்தை, அறங்காரியத்துக்காக நன்கொடை செய்த , 8 வயது சிறுவன் கிரிஷ் ஹரன் நாயர் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

ஒரு சிறுவனாக புத்தக விற்பனையின் வாயிலாக மிக அதிகமான தொகையை அறக்கட்டளைக்கு வழங்கியதன் அடிப்படையில், கிரிஷுக்கு அந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கிரீஷ் , தான் எழுதிய 14 பக்கங்கள் கொண்ட ‘ Mysterious War in the Deep’ எனும் புத்தக விற்பனையின் வாயிலாக 7,000 ரிங்கிட்டை ஈட்டினார். அதனை ஜோகூர் Sultan Ibrahim அறக்கட்டளைக்கு வழங்கினார்.

கிரீஷ் அடுத்ததாக, கோவிட் பெருந்தொற்றினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் அலல்து ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கும் உதவுவதற்காக நன்கொடை திரட்டப் போவதாக கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!