தம்பின், மே 2 – கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி, வேலையில்லா ஆடவன் ஒருவன் 8 வயது சிறுமியின் காற்சட்டையை தொடை வரை கழட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளான்.
அச்சிறுமியின் தாய் நேற்று மதியம் காவல்துறையில் புகார் செய்த நிலையில், இரவு 9.20 மணியளவில்
அந்த 20 வயதுக்குட்பட்ட ஆடவனை போலீசார் கைது செய்ததாக தம்பின் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டன் அமிருதின் சரிமான் தெரிவித்தார்.
அந்த நபர் பொருட்களை எடுக்கத் தன்னுடைய மகளை அழைத்துச் சென்று, தொடை வரை காற்சட்டையைக் கழட்டியுள்ளான். எனினும், பாதிக்கப்பட்ட தனது மகள் உடனடியாக அறையை விட்டு வெளியேறி அங்கிருந்து தப்பியதாக அந்த தாய் தனது புகாரில் கூறியுள்ளார்.
இதனிடையே கைது செய்யப்பட்ட அந்த ஆடவன் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.