
பாசிர் கூடாங், மார்ச் 8- ஜோகூர், Masai, Kampung Pertanian பகுதியில் 8 வீடுகள் தீப்பற்றிய சம்பவத்தில், பெண் ஒருவர் தீப்புண் காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்தார். அந்த தீ சம்பவத்தில் Rahmaniyah எனப்படும் 33 வயது பெண் உயிரிழந்ததாக , அக்கிராமத்து தலைவர் தெரிவித்தார்.
அப்பெண்ணின் மற்றொரு குடும்ப உறுப்பினர் , தீப்புண் காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.
அந்த சம்பவத்தில் தங்குமிடத்தை இழந்த 27 பேர் , அக்கிராமத்தில் உள்ள பொது மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.