கோலாலம்பூர், பிப் 22- பிரச்சனை கொடுக்காத அண்டை வீட்டுக்காரர் அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. அவ்வகையில், தன் வீட்டின் முன் தொடர்ந்து காரை நிறுத்தி வந்த அண்டை வீட்டுக்காரரின் செயலை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாத தம்பதியர், புதிய யுக்தியை கையாண்டனர்.
தங்களின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அண்டை வீட்டாரின் காரின் மீது , 800 ரிங்கிட்டிற்கு இக்கார் விற்பனைக்கு வருவதாக விளம்பரத்தை வைத்தனர். களைக்கொல்லி மருந்தின் போத்தலின் மீது விற்பனைக்கான அந்த வாசகத்தை எழுதியிருந்தனர். அக்காரை வாங்குவோருக்கு அந்த களைக்கொல்லி மருந்தின் போத்தல் இலவசம் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் அக்கார் அண்டை வீட்டாரின் சொந்த பகுதியில் நிறுத்தப்பட்டதாக பெண் ஒருவர் பகிர்ந்து கொண்டிருந்த காணொளி டிக் டாக்கில் வைரலாகியிருந்தது.