Latestஉலகம்

8,000 ரிங்கிட் டிப்ஸ்; உணவு விநியோகிப்பாளருக்குக் கிடைத்த வெகுமதி

ஆஸ்டின், ஜன 12- மற்றவருக்கு நல்லது செய்தால், நமக்கும் நல்லதே நடக்கும் என்பார்கள்.

அந்த வகையில், அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணத்தில் உணவு விநியோகிப்பாளர் ஒருவரின் கனிவான செய்கை இறுதியில் அவருக்கே பெரும் வெகுமதியைப் பெற்றுத் தந்திருக்கின்றது.

முன்னதாக, வாடிக்கையாளருக்கு உணவு விநியோகித்த அவர் கூடவே, ஒரு பையில் சில மிட்டாய்களையும், வாழ்த்து அட்டையையும் வைத்திருக்கின்றார். மேலும் திசுதாளைப் பரப்பி, அதில் உணவுப் பொட்டலங்களை நேர்த்தியாக விட்டுச் சென்றிருக்கின்றார்.

டோனால்ட் என்ற அடைமொழிகொண்ட அந்த உணவு விநியோகிப்பாளரின் இச்செயலைத் தனது வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவியில் கண்டு வாடிக்கையாளர் மனம் நெகிழ்ந்தார். அதனைத் தனது டிக்டாக் கணக்கிலும் பதிவிட்டதோடு டோனால்டுக்கு டிப்ஸ் கொடுக்கும்படியும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, டோனால்ட்டின் கனிவான அந்தச் சேவைக்காக கிட்டதட்ட 8,000 ரிங்கிட் டிப்ஸ் சேகரிக்கப்பட்டு அவரிடம் வழங்கப்பட்டிருக்கின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!