ஜோர்ஜ் டவுன் , பிப் 9 – அங்காடிக் கடைக்காரர்களுக்கான திட்டத்திற்கு
80,000 ரிங்கிட் பொய் கணக்கு காட்டியதன் தொடர்பில் பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரின் முன்னாள் சிறப்பு அதிகாரியின் முன்னாள் உதவியாளர் உட்பட ஆறு தனிப்பட்ட நபர்களை MACC அதிகாரிகள் கைது செய்தது. MACC அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்த 22 முதல் 50 வயதுடைய மூன்று ஆடவர்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டதாக MACC க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. கைதானவர்களில் மூவர் 24 மணி நேரத்தில் எம்.ஏ.சி ஜாமினில் விடுதலை செய்யப்படுவர். இதர மூவரை விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுத்துவைப்பதற்கு நாளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது.