
சிரம்பான், செப் 14 – நெகிரி செம்பிலான் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 80 ,000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இம்மாதம் 6 மற்றும் 7ஆம் தேதி ஜெம்போல் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 124 பேர் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மத் ஜாஃபிர் முகமட் யூசோஃப் தெரிவித்தார். நெகிரி செம்பிலான் போதைப் பொருள் விசாரணைத் துறை, புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றவியல் விசாரணைத்துறை ஆகியவை கூட்டாக அந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். இதனிடையே இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம்வரை 132 போதைப் பொருள் விநியோகிப்பாளர்கள் கைது செய்யப்பட்டதோடு போதை மாத்திரைகள் மற்றும் போதைப் பொருள்களும் பெரிய அளவில் பறிமுதல் செய்ய்ப்பட்டதாக அஹ்மத் ஜாஃபிர் முகமட் யூசோஃப் கூறினார்