Latestமலேசியா

800,000 ரிங்கிட் சம்பள பாக்கி, சம்பளம் பிடித்தம் 60 தொழிலாளர்கள் தொழிலாளர் துறையிடம் புகார்

கோலாலம்பூர், நவ 27 – ஜப்பானிலுள்ள மூன்று பிராதான மின்னியல் நிறுவனங்களுக்கு உபரி பாகங்களை தயாரிக்கும் கிள்ளானிலுள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையின் சுமார் 60 தொழிலாளர்கள் தங்களுக்கு பாக்கி சம்பளம் மற்றும் சம்பளம் பிடித்தம் செய்யப்பட் 800,000 ரிங்கிட் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து தொழிலாளர் துறையிடம் புகார் செய்துள்ளனர். இது தொடர்பான வெவ்வேறு நான்கு புகார் அறிக்கைகளை போர்ட் கிள்ளானிலுள்ள தொழிலாளர் துறையிடம் 57 தொழிலாளர்கள் தாக்கல் செய்துள்ளனர். அந்த நிறுவனம் தங்களுக்கு இன்னமும் 806,310 ரிங்கிட் சம்பளத்தையும் லெவி கட்டணத்திற்காக அனுமதிக்கப்படாத சம்பள பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும் வழங்காமல் இருப்பதாக அவர்கள் புகார் செய்துள்ளனர்.

கடந்த மே மாதத்திலிருந்து ஆறு மாத காலமாக சம்பந்தப்பட்ட அந்த தொழிற்சாலை சம்பளம் வழங்காமல் இருப்பதாக அவர்கள் தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் சம்பளத்திற்காக அந்த தொழிற்சாலை ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். கடந்த செம்டம்பர் மாதம் சம்பந்தப்பட்ட அந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையை தொழிலாளர் துறை சோதனை செய்ததில் அந்த தொழிற்சாலை ஏப்ரல் மாதத்திலிருந்து அதன் 200 க்கும் மேற்பட்ட வங்காளதேச தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருந்ததோடு அவர்களது கடப்பிதழிகளையும் வைத்திருந்தது தெரியவந்தது. தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிவரும் Andy Hall செய்த புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!