Latestமலேசியா

88 லட்சம் பேர் மக்கள் தொகையைக் கடந்த கோலாலம்பூர்; 2030-ல் 98 லட்சம் பேராக உயரக் கூடும்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-7, கோலாலம்பூரின் மக்கள் தொகை தற்போது 88 லட்சம் பேரைத் தாண்டியிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அவ்வெண்ணிக்கை, கடந்தாண்டை விட 2.25 விழுக்காடு அதிகமமென கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தாஃபா (Dr Zaliha Mustafa) தெரிவித்தார்.

இதுவே 2030-ஆம் ஆண்டு வாக்கில் அவ்வெண்ணிக்கை 98 லட்சம் பேராக உயர்ந்திருக்குமென்றார் அவர்.

1 கோடி பேரை நோக்கிச் செல்லும் இந்த அபரிமித மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப தலைநகரில் அடிப்படை வசதிக் கட்டமைப்புகளும் தரமுயர்த்தப்பட வேண்டும்.

அதோடு, நகரத் திட்டமிலை கோலாலம்பூ மாநகர மன்றம் (DBKL) ஆக்கரமாக மேற்கொள்ள வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

மக்கள் தொகை வளர்ச்சி, மாநரின் மையப் பகுதிகளை மட்டுமல்ல, புறநகர்ப் பகுதியிலிருந்து வருவோரின் எண்ணிக்கையையும் உட்படுத்தியுள்ளது.

மாநகரவாசிகள் அனைவருக்கும் மிகச் சிறந்த அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பால் அதிகரிக்கக் கூடிய தூய்மைக்கேட்டு பிரச்னைகள், பசுமை இடங்களுக்கான பற்றாக்குறைப் போன்றவற்றிலும் DBKL தீவிர கவனம் செலுத்துமென Dr சாலிஹா சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!