
ஈப்போ மே 22- NUPW எனப்படும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு 19 ஆயிரம் ரிங்கிட் உட்பட 89 தொழிற்சங்கங்களுக்கு மானியத்தை மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் வழங்கினார். ஈப்போ இம்பியானா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வுக்கு மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் சார்பில் மலேசிய தொழிற்சங்க பதிவு இலாகாவின் தலைமை இயக்குனர் கமால் பாட்லி தலைமைத் தாங்கினார். இந்த நிகழ்வில் 189 தொழிற்சங்கங்களுக்கு மொத்தம் 26 லட்சம் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டது .தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக சிலாங்கூர் மாநில செயலாளர் வை.தாமாசோகரன், பேராக் மாநில தலைவர் ரசாக் மற்றும் மாநில செயலாளர் மு. குணாசன் 19,000 ரிங்கிட் மானியத்தை நேரடியாக பெற்றுக் கொண்டனர்.
தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கு ஏதுவாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே 19,000 வெள்ளியை வழங்கிய மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு தேசிய தோட்டத் தொழிற்சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.