கோலாலம்பூர். மார்ச் 3 – Wangsa Maju வில் 9 இணைய சூதாட்ட மையங்களின் மின் விநியோகத்தை அதிகாரிகள் இன்று துண்டித்தனர். அந்த சூதாட்ட மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக wangsa Maju போலீஸ் தலைவர் Ashari Abu Samah தெரிவித்தார்.
போலீஸ் மற்றும் Tenaga Nasional கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட இணைய சூதாட்ட மையங்களுக்கு எதிராக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக அவர் கூறினார்.