Latestமலேசியா

பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் 2024ஆம் ஆண்டிற்கான கோலாலம்பூர் ஒற்றுமை பேரணி நடைபெறும்

கோலாலம்பூர், பிப் 2 – Unity Parade, KL Society மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சகம் KPN ஆகியவை ஒன்றிணைந்து 2024ஆம் ஆண்டிற்கான கோலாலம்பூர் ஒற்றுமை பேரணியை தலைநகரில் ஏற்பாடு செய்துள்ளது.

வருகின்ற பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் திகதிகளில், இந்த கோலாலம்பூர் ஒற்றுமை பேரணி நடைபெறவுள்ளது. கலாச்சாரம், கல்வி, சமூக ஈடுபாடு மற்றும் நாட்டில் ஒற்றுமை வளர்க்கும் நோக்குடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டவுள்ளதாக KL Society-யின் தலைவர் பிரதீபன் லெட்சுமணசிங்கம் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த ஒற்றுமை பேரணி திட்டத்தின் இயக்குனர் நோரிசான் அப்துல் மஜித் கூறுகையில், ‘நாட்டில் அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமைக்கு பாடுபடுமாறு டத்தோ ஸ்ரீ அன்வார் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சி தேசப்பற்று, இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வு வளர்க்கும் அம்சத்திலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும் அமைந்துள்ளது,’ என்றார்.

‘இந்த ஒற்றுமை அணிவகுப்பு நிகழ்ச்சியில் மொத்தம் 6,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள இலக்கு வைக்கப்படுள்ளது. இதில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு டத்தாரான் மெர்டேக்காவில் தொடங்கி மற்ற இடங்களுக்குக் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் சொல்வதும் அடங்கும்’ என்று கோலாலம்பூரில் அமைந்துள்ள கேபிடல் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!