உலுத்திரம், மே 4 – குறைந்த மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமல்லாது கரையான் தூசிகளால் அவதியுற்று வருகிறது மாடோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி.
இந்நிலையில், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவிட்டால் விரைவில் மூடுவிழா காணும் அபாயத்தை அது எட்டியுள்ளது.
1928 ஆண்டு முதல் ஜோகூர், உலு திராமில் செயல்பட்டு வரும் அப்பள்ளி, ஒரு காலகட்டத்தில் பாலர் பள்ளியுடன் 130 மாணவர்களை கொண்டு இயங்கியுள்ளது.
ஆனால் தற்போது வெறும் 9 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் மட்டுமே உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு, போக்குவரத்து பிரச்சனைகள் உட்பட, பள்ளிக்கு அருகில் உள்ள மணல் குவாரிக்கு மணல் லோரிகள் செல்ல தூசிகளும், அதனால் கறையான்களும் பள்ளிக்கு படையெடுத்துள்ளதும் காரணங்களாக உள்ளதாக பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் வாசுகி வெள்ளச்சாமி விவரித்தார்.
Voice note
இச்சிக்கல்களைக் கருத்தில் கொண்டு பள்ளியும் தாமான் யூனிவர்சிட்டி பகுதியில் அரசாங்கத்திடம் மாற்று நிலத்திற்கு விண்ணப்பித்துள்ள போதிலும் இதுவரை சரியான பதிலை யாரும் கொடுக்கவில்லை என்று வாசுகி கூறினார்.
இடம் இருந்தாலும், அதற்கு 16 இலாகாக்களின் பரிந்துரைகள் பெற வேண்டும் எனும் நிலையில், மாணவர்கள் அதற்குள் இன்னும் குறைந்து விடுவார்களோ எனும் கவலை தங்களை பிடித்துள்ளது என்றார்.
பலகையிலான அப்பள்ளி கரையான்களால் மிகவும் மோசமடைந்து வருகின்ற நிலையில், பள்ளியின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கு அரசாங்கமும் சமூகத் தலைவர்களும் உடனடியாக தீர்வு காணவேண்டும் என வாசுகி கேட்டுக்கொண்டுள்ளார்.