
புதுடில்லி, ஆக 8- இந்தியாவில் சட்டிஸ்கார் மாநிலத்தில் ஆடவர் ஒருவர் தனது 9 வயது மகன் மற்றும் 6 வயது மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். 30 வயதுடைய அந்த ஆடவர் மற்றும் அவரது பிள்ளைகளின் சடலத்தை போலீசார் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு கொண்டுச் சென்றனர். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என போலீஸ் அதிகாரி Sukhnandhan Rathore தெரிவித்துள்ளார்.