ஜோகூர் பாரு, பிப் 14 – பாசீர் கூடாங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படுத்தியதோடு ஐந்து வாகனங்களை மோதித் தள்ளிய லோரி ஓட்டுனர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மதுபோதையுடன் வாகனம் ஒட்டியதாக நம்பப்படுகிறது என Seri Alam மாவட்ட போலீஸ தலைவர் Superintendan Mohd Sohaimi Ishak தெரிவித்தார்.
37 வயதுடைய அந்த ஆடவர் பாசீர் கூடாங்கிலிருந்து ஜோகூர் பாருவை நோக்கிச் சென்றபோது அவர் ஓட்டிய லோரி கவிழ்ந்ததோடு எதிரே வந்த இதர 5 வாகனங்களை மோதித் தள்ளியது. அந்த விபத்தில் 21 வயதுடைய Perodua Alza கார் ஓட்டுனர் இறந்தார்.