
சென்னை, பிப் 2 – சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின்போது காயம் அடைந்த நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி , தான் 90% குணமடைந்திருப்பதாக, தனது உடல் நிலை குறித்து டுவிட் செய்திருக்கின்றார்.
“உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.
என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணர்கிறேன்.
வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்” என பதிவிட்டிருக்கின்றார்.
கடந்த மாதம் , லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது படகு விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்தார்.
மலேசியாவில், ஆரம்பகட்ட சிகிச்சையைப் பெற்ற பின்னர் சென்னைக்கு திரும்பி சிகிச்சையைத் தொடர்ந்த விஜய் ஆண்டனி , விரைவில் தனது உடல்நிலை குறித்து அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காயத்தில் இருந்து தாம் மீண்டு வந்திருப்பதாக விஜய் ஆண்டனி குறிப்பிட்டிருக்கின்றார்.