Latestமலேசியா

93 லட்சம் ரிங்கிட் போதைபொருள் பறிமுதல் ; தம்பதியர் கைது

கோலாலம்பூர், ஜூன்  11-  93 லட்சம் ரிங்கிட் பெருமானமுள்ள  பல்வேறு வகை போதைப் பொருளை , கோலாலம்பூர் போலீசார் பறிமுதல் செய்தனர். அண்மையில், கிள்ளன் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில், அந்த பெரிய எண்ணிக்கையிலான  போதைப் பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டதாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர்  டத்தோ அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.

அந்த சோதனை நடவடிக்கையின் போது, செராஸ்- சில் உள்ள வீடொன்றில்  21 வயதிலிருந்து 31 வயது மதிக்கத்தக்க மூவர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களில் இருவர் கணவன் மனைவி ஆவர்.

ஜூன் 5, 6 -ஆம் தேதிகளில்,  செராஸ், கோலாலம்பூர், காஜாங்  ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அந்த  நடவடிக்கையின்போது, போலிசார்  98. 35 கிலோகிராம் எடையிலான  ஹெரோய்ன்,  9.87 கிலோகிராம் எடையிலான கெத்தாமின், 59,000 எரிமின் 5 வகை போதை மாத்திரைகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

அத்துடன்,   3 தொயொத்தா வெல்ஃபயர் ( Toyota Velfire) கார்கள், 2 ஹொண்டா சிட்டி கார்கள், ஒரு புரோட்டோன்  ஈஸ்வரா கார்  ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடக்க்க விசாரணையில்  கைதான  மூவருக்கும்  போதைப் பொருள் தொடர்பில் பழைய  குற்றப் பதிவுகள்  இருப்பது  தெரிய வந்தது. கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,  டத்தோ அஸ்மி அபு காசிம் இந்த  விபரங்களை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!