கோலாலம்பூர், மார்ச் 5 – நாட்டில் 5 முதல் 11 வயதுடைய 970,000 மேற்பட்ட சிறார்கள் முதலாவது தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். சிறார்ளுக்கான தேசிய தடுப்பூசி திட்டமான PICKids மூலம் அவர்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளதாக CovidNow அகப்பக்கம் தகவல் வெளியிட்டது.
பெரியோர்களில் 63.5 விழுக்காட்டினர் அல்லது ஒரு கோடியே 49 லட்சத்து 43,712 பேர் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுள்ளனர். 2கோடியே 29 லட்சத்து 53,291 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் மொத்த பெரியோர்களின் எண்ணிக்கையில் அல்லது 98.6 விழுக்காட்டினர் ஒரு தடுபபூசியை செலுத்திக்கொண்டுள்ளனர், 12 முதல் 17 வயதுடையவர்களில் 28 லட்சத்து 3,567 பேர் முழுமையாக தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளதாக CovidNow அகப்பக்கம் செய்தி வெளியிட்டது.