கோலாலம்பூர், ஆகஸ்ட்-19 – A, B மற்றும் O வகை இரத்தக் கையிருப்புக்கு அவசரத் தேவை ஏற்பட்டுள்ளதால், அவ்வகை இரத்தப் பிரிவைச் சேர்ந்த பொது மக்கள் முன்வந்து இரத்த தானம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அவ்வகை ரத்தப் பிரிவுகளின் கையிருப்புக்கான தேவை அதிகரித்து வருவதாக, தேசிய ரத்த மையம் தனது facebook-கில் தெரிவித்தது.
O+ மற்றும் A+ ரத்த வகைகளுக்கான தேவைகளும் அதிகரித்துள்ளன.
இதனால் இரத்த சேமிப்புக் கையிருப்பில் பெரும் சவால் ஏற்பட்டிருப்பதாக அம்மையம் கூறியது.
இரத்தக் கசிவினால் வரும் அவசர சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மேற்கண்ட ரத்த பிரிவுகளின் கையிருப்பு மோசமாக குறைந்துள்ளது.
இவ்வாரம் மட்டுமே O+, A+ இரத்த கையிருப்புகளுக்கு மருத்துவனைகளிடமிருந்து இடைவிடாது அழைப்புகள் வந்த வண்ணமுள்ளதாக அம்மையம் விளக்கியது.
நாட்டில் இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் 104,757 பேர் இரத்த தானம் செய்துள்ளதாக தேசிய இரத்த மையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.