Latestஉலகம்விளையாட்டு

AFF கிண்ணத்தை தாய்லாந்து காற்பந்து அணி தற்காத்துக் கொண்டது

பேங்காக், ஜன 17 – AFF எனப்படும் ஆசியான் காற்பந்து சம்மேளன கிண்ணத்தை தாய்லாந்து தற்காத்துக் கொண்டது. நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது கட்ட இறுதியாட்டத்தில தாய்லாந்து 1- 0 என்ற கோல் கணக்கில் வியட்னாம் அணியை வீழ்தியது. இந்த ஆட்டத்தில் தாய்லாந்து குழுவுக்கான வெற்றி கோலை அதன் கேப்டன் Theeraton Bunmathan  24 – ஆவது நிமிடத்தில் அடித்தார். ஏற்கனவே கடந்த வாரம் Hanoi  – யில் நடைபெற்ற அவ்விரு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் கட்ட ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இறுதியாட்டத்தில் தாய்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வியட்னாம் அணியை வீழ்த்தி AFF கிண்ணத்தை கைப்பற்றியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!