Latestஉலகம்

தொப்பியைத் திருப்பிக் கொடுக்காததால் கோபம்; இந்தோனேசியாவில் காதலனின் டிகிரி பட்டத்தை எரித்த காதலி

இந்தோனேசியா, டிச 18 – காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து மூண்ட சண்டையினால் ஆத்திரமடைந்த காதலி காதலனின் டிகிரி பட்ட சான்றிதழை எரித்த சம்பவம் இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கான உண்மைக் காரணம் தெரியாத நிலையில், மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தை திருப்பிக் கொடுக்காததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தலைக்கவசத்தை திருப்பிக் கொடுக்காதது ஒரு பக்கம் இருக்க அதனை முறையாக தன்னிடம் தொடர்புக் கொண்டு தெரிவிக்காததால் காதலியின் கோபம் அதிகரித்ததாக தெரிய வந்துள்ளது.

தலைக்கவசத்தை திருப்பிக் கொடுக்க சென்ற காதலன் தன்னுடைய சான்றிதழ் எரிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளான்.

இதனிடையே சிறிய பிரச்சனைக்கு இப்படி ஒரு செயலா? என வலைத்தளவாசிகள் அக்காதலியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!