Latestமலேசியா

AFF கிண்ணம் சிங்கப்பூருடன் ஹரிமாவ் மலாயா இன்று மோதுகிறது

கோலாலம்பூர், ஜன 3 – AFF எனப்படும் ஆசியான் காற்பந்து சம்மேளன காற்பந்து போட்டியில் இன்றிரவு Bukit Jalil தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் Harimau Malaya சிங்கப்பூருடன் மோதுகிறது. B பிரிவுக்கான அந்த ஆட்டத்தில் மலேசிய காற்பந்து குழு வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதிபெறமுடியும். எனவே ரசிகர்கள் திரளாக வருகை தந்து மலேசிய காற்பந்து குழுவிற்கு ஆதரவு வழங்கும்படி தேசிய காற்பந்து குழுவின் பயிற்சியாளரான Kim Pan Gon கேட்டுக்கொண்டார். ஆயிரக்கணக்கான மலேசிய ரசிகர்களின் ஆதரவு இன்றைய ஆட்டத்தில் தேசிய காற்பந்து குழுவின் வெற்றிக்கு பெரும் ஊக்குவிப்பாக அமைய முடியும் என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!