
புக்கிட் ஜாலில், ஜன 8 – நேற்றிரவு, Bukit jalil தேசிய அரங்கில் நடைபெற்ற AFF கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் கடுமையான போட்டிக்குப் பின்னர், மலேசிய அணியினர் , தாய்லாந்து அணியினரை ஒற்றைக் கோலில் தோற்கடித்தனர்.
நேற்று தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடிய அதிரடி ஆட்டக்காரர் Mohammad Faisal Abdul Halim ஆட்டத்தின் 11 -வது நிமிடத்தில் மலேசிய அணிக்கான அந்த வெற்றிக் கோலை அடித்தார்.
இவ்வேளையில் , மலேசியா – தாய்லாந்து இடையிலான இரண்டாம் கட்ட அறையிறுதி ஆட்டம், அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தாய்லாந்து Thammasat அரங்கில் நடைபெறவிருக்கிறது.