
நியு யோர்க், மார்ச் 29 – தற்போது உலகளவில் அதிகம் பிரபலம் அடைந்திருக்கின்றது AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
இந்த தொழில்நுட்பம் தொழிற்துறைகளை ஆக்கிரமித்தால், உலகளவில் 30 கோடி முழு நேர வேலைகள் காணாமல் போகுமென , Goldman Sachs முதலீட்டு வங்கி அதிர்ச்சி ஆய்வினை வெளியிட்டிருக்கின்றது.
மனிதர்கள் செய்யக் கூடியதைப் போன்றே படங்கள், வீடியோக்கள், உரை, 3D முப்பரிமாண மாடல்கள் போன்றவற்றை AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்க முடியும்.
இதனால், மனிதர்கள் செய்யக் கூடிய வேலைகள் மெல்ல மறையுமென அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக நிர்வாகத் துறையைச் சேர்ந்த 46 விழுக்காடு வேலைகளையும், சட்டத் துறையைச் சேர்ந்த 44 விழுக்காடு வேலைகளையும் AI தொழில்நுட்பம் எடுத்துக் கொள்ளுமென அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.