புது டெல்லி, ஏப்ரல் 6 – இந்தியாவில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கும் வேளை, அதனைச் சீர்குலைக்க சீனா முயலும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
AI தொழில்நுட்ப உதவியுடன் ஒலி மற்றும் காணொலி உள்ளடக்கங்களை உருவாக்கி இந்தியத் தேர்தலைச் சீர்குலைக்க சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக Microsoft நிறுவனத்தின் ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.
என்றாலும் சீனாவின் அந்நடவடிக்கை இந்தியத் தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்புக் குறைவே எனக் கூறப்படுகிறது.
தென் கொரியா, அமெரிக்கத் தேர்தல்களிலும் சீனா தனது கைவரிசையைக் காட்ட ஆயத்தமாகி வருகிறதாம்.
இதற்கெல்லாம் முன்னோட்டமாக,
ஜனவரியில் நடைபெற்ற தைவானிய அதிபர் தேர்தலின் போதே, சீனா AI மூலம் உருவாக்கப்பட்ட தவறான தகவல் பிரச்சாரத்தை முயற்சித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இது போன்ற முக்கியத் தேர்தல்களில் தனது இருப்பைக் காட்டிக் கொள்ளும் முயற்சியாக சீனா அந்நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக Microsoft தெரிவிக்கிறது.
Memes, ஒலி மற்றும் காணொலி உள்ளடக்க உருவாக்கங்களில் பரிசோதனையை அதிகரிக்கும் வாய்ப்பாகவும் சீனா இதனைப் பயன்படுத்திக் கொள்கிறதாம்.
இந்தியாவில் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது.