பட்டவொர்த், பிப் 25 – 89 ஆண்டுகள் பழமையான Assumption தேசியப் பள்ளிக்கூடம் இன்றுடன் மூடப்பட்டது. பினாங்கு, பாகான் டாலாமில் அமைந்திருக்கும் அந்த பள்ளிக்கூடம் மூடப்படுவதிலிருந்து காப்பாற்ற இதற்கு முன்பு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் உட்பட பல தரப்பினர் முயற்சிகளை எடுத்திருந்தனர்.
எனினும் அந்த முயற்சிகள் எதுவும் கைகூடாத நிலையில், இன்று கடைசியாக நடைபெற்ற கற்றல் கற்பித்தல் நடவடிக்கையுடன், மாணவர்களும், ஆசிரியர்களும் சோகத்துடன் அப்பள்ளியிலிருந்து விடைபெற்றனர்.
முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஏற்கனவே அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டு விட்ட நிலையில் , இன்று கடைசியாக 6-ஆம் வகுப்பு பயிலும் 10 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர்.
பள்ளி அமைந்திருக்கும் நிலத்தை அதன் உரிமையாளர் மீண்டும் கோரியதை அடுத்து, Assumption பள்ளிக்கூடத்தை மூட முடிவெடுக்கப்பட்டது.