Latestமலேசியா

Assumption பள்ளியை மேலும் ஒரு ஆண்டு செயல்பட அனுமதிப்பீர் – டாக்டர் ராமசாமி – சதிஷ் வலியுறுத்து

பினாங்கு , பிப் 3 – பட்டர்வெர்த்திலுள்ள Assumption பள்ளியை மூடுவதற்கு முன் அப்பள்ளி தொடர்ந்து மேலும் ஒரு ஆண்டு காலம் செயல்படுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் அமைதி மறியலை நடத்தினர். நேற்று நடைபெற்ற அந்த அமைதி மறியலில் பினாங்கின் இரண்டாவது முதலமைச்சர் டாக்டர் பி. ராமசாமி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதிஷ் முனியாண்டியும் கலந்துகொண்டனர். Assumption பள்ளியை இம்மாத இறுதியோடு மூடுவதற்கு கல்வி அமைச்சு எடுத்துள்ள முடிவுக்கு அந்த அமைதி மறியலில் கலந்துகொண்ட அனைவரும் தங்களது ஆட்சேபத்தையும் தெரிவித்தனர்.

அப்பள்ளியின் விவகாரத்திற்கு சிறந்த முறையில் தீர்வு காண்பதற்கு மேலும் ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். இதன்வழி 90 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட Assumption தேசிய பள்ளிக்கான நிலத்தை பெறுவதற்கான முயற்சியையும் தீவிரப்படுத்த முடியும் என டாக்டர் ராமசமியும் சதிஷ் முனியாண்டியும் வலியுறுத்தினார். இம்மாத இறுதியோடு அப்பள்ளி மூடப்படும் என ஏற்கனவே கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்த பள்ளி இருக்கும் இடத்தின் நிலத்தை எடுத்துக்கொள்ளவிருப்பதாக அதன் நில உரிமையாளரான Sri Avenue Sdn Bhd நிறுவனத்துடன் தாம் தொடர்பு கொண்டதையும் சதிஷ் தெரிவித்தார்.

இன்னும் ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என அவர் வலியுறுத்தினார், இந்த விவகாரத்தை சிறந்த முறையில் எப்படி தீர்வு காண்பது என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். ஆனால் இப்பள்ளியை மூடுவது என்ற முடிவில் கல்வி அமைச்சர் உறுதியாக இருந்தால் புத்ரா ஜெயாவில் கல்வி அமைச்சு முன் மறியல் செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என சதிஷ் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!