Latestமலேசியா

AstraZeneca தடுப்பூசியை பெறுபவர்கள்  காப்புறுதி பாதுகாப்பைப் பெறுகின்றனர்

கோலாலம்பூர், மே 4 – நாட்டில்  AstraZeneca கோவிட் -19 தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளவிருப்பவர்கள், காப்பீட்டு பாதுகாப்பைப் பெற்றுள்ளனர்.

பக்க விளைவுகளுக்கான சாத்தியங்களை அறிந்தே  தன்னார்வ முறையில் , மக்கள்  அந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முன் வந்தாலும், விளைவுகள் ஏற்படுமாயின் அவர்களுக்கு காப்பீட்டு  தொகையின் இழப்பீடு வழங்கப்படுமென, அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க  அமைச்சர்  கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

நாட்டின் கோவிட் -19 தடுப்பூசிக்கான பாதிப்பு நிதியின் கீழ், AstraZeneca தடுப்பு மருந்துக்கு காப்பீடு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அந்த காப்பீட்டின் கீழ்,  கடும் பக்க விளைவுகளுக்கு ஆளாகியிருப்பவர்களுக்கு  50,000 ரிங்கிட் இழப்பீடு வழங்கப்படும்.  நிரந்தர உடல் பாதிப்பு அல்லது இறப்பு ஏற்பட்டவரின் குடும்பத்தினர், ஐந்து லட்சம் ரிங்கிட்  வரையில் காப்புறுதி பணத்தைப் பெறுவர்.

மலேசியா, பிரிட்டன் நிறுவனத்திடமிருந்து வாங்கிய   2 லட்சத்து 68 ஆயிரம் சொட்டு கோவிட் -19 தடுப்பு மருந்துக்கான முன் பதிவு நடவடிக்கைகள்  கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.  நான்கு மணி நேரத்திற்குள், அந்த தடுப்பு மருந்துக்கு கோலாலம்பூர், சிலாங்கூர் மாநில மக்கள் முழுமையாக பதிவு செய்துக் கொண்டனர்.

நாளை தொடங்கி,  நான்கு பிரத்தியேக மையங்களில் AstraZeneca தடுப்பு மருந்து போடப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!