
சரவாக், ஜன 19 – சரவாக், சிபுவில், ATM பணப் பட்டுவாடா இயந்திரத்தின் திரைகளை, சுத்தியலை கொண்டு அடித்து சேதப்படுத்திய ஆடவன் ஒருவனுக்கு, முன்றாண்டுகள் சிறைத் தண்டனையும், மூவாயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்து மாஜிஸ்டிரெட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
37 வயது Jaquclyn Vosco எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான குற்றச்சாடை ஒப்புக் கொண்டதை அடுத்து அவனுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இம்மாதம் 15-ஆம் தேதி, இரவு மணி 9.30 வாக்கில், ஜாலான் கம்போங் ஞாபோரிலுள்ள வங்கி ஒன்றில் அவன் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.
சம்பவ இடத்தில் பொருத்தப்படிருந்த CCTV இரகசிய கண்காணிப்பு காமிராவில் அவனது செயல் பதிவாகியிருந்ததோடு, அதனால் 35 ஆயிரம் ரிங்கிட் வரையில் இழப்பு ஏற்பட்டது.