
இந்தோனேசியா, பிப் 1 – ஜாவா பாராட்டில், வங்கியின் ATM பணப்பட்டுவாடா இயந்திரத்தில் செலுத்துவதற்காக 48 லட்சம் ரூபியா பணத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பாதுகாவலர் நிதுவனத்தின் வேனை, கொள்ளையன் ஒருவன் லாவகமாக எடுத்துச் செல்லும் காணொளி வைரலாகியுள்ளது.
வங்கி முன் வேனை நிறுத்தி விட்டு, அதன் பின்புறத்தில் நின்றுக் கொண்டு பாதுகாவலர்கள் உரையாடிக் கொண்டே தங்கள் கைப்பேசியை பார்த்துக் கொண்டிருக்கும் போது, முகமூடி அணிந்த ஆடவன் ஒருவன் யாரும் அறியாமல் வேனின் பக்கவாட்டு வழியே அதில் ஏறி மிகவும் நிதானமாக அதனை இயக்கி எடுத்துச் செல்லும் காட்சிகள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளன.
பாதுகாவலர்களின் கவனக்குறைவால், அவ்வாடவன் வேனை மிக வேகமாக செலுத்தி அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றான்.
எனினும், சம்பவம் நிகழ்ந்த 72 மணி நேரத்திற்குள், அந்த கொள்ளையனும், அவனுக்கு உடந்தையாக செயல்பட்ட இதர இருவரும் கைதுச் செய்யப்பட்டனர்.