
திரங்கானு, ஜெர்தேவில், போதைப் பொருள் வாங்க பணம் இல்லாததால், வங்கி ஒன்றின் பணப்பட்டுவாடா இயந்திரத்தை உடைத்து கொள்ளையிட முயன்ற ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டான்.
நேற்று மாலை மணி 6.30 வாக்கில், வங்கியில் எச்சரிக்கை ஒலி அடித்ததை அடுத்து, வங்கி நிர்வாகத்திடமிருந்து அவசர அழைப்பு கிடைத்ததாக, பெசூட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அப்துல் ரோசாக் முஹமட் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆடவன் பணப்பட்டுவாடா இயந்திரத்தின் முகப்பை உடைத்துவிட்ட போதிலும், அதிலிருந்த பணத்தை எடுக்காமல் ஓடி விட்டதை, வங்கி தரப்பினர் உறுதிப்படுத்தினர்.
அந்த 42 வயது ஆடவன் இன்று காலை கம்போங் புக்கிட் ரம்புதானில் கைதுச் செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.