
கோலாலம்பூர், மார்ச் 17 – சொந்தமாக பூட்டிக் கொள்ளும் ‘auto lock’ காரணமாக , காரொன்றுக்குள் அரை மணி நேரம் சிக்கிக் கொண்ட 2 பிள்ளைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அந்த சம்பம் Subang Jaya, Putra Heights, Persiaran Putra Indah பகுதியில் நிகழ்ந்த வேளை , காருக்குள் சிக்கிக் கொண்ட குழந்தைகளின் வயது 4 மற்றும் 16 மாதங்கள் என சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு துறையின் இயக்குநர் Morni Mamat தெரிவித்தார்.
அவசர அழைப்பு கிடைத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாற்று சாவியைப் பயன்படுத்தி பிள்ளைகளைக் காப்பாற்றியதாக அவர் கூறினார்.