
கோலாலம்பூர். மார்ச் 7- 1998 ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 36 ஆவது விதியை மீறிய சாத்தியம் தொடர்பில் Awesome Broadcasting Sdn Berhad ட்டிற்கு எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுப்பது குறித்து மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் பரிசீலித்து வருகிறது. ஒளிபரப்பு கழகங்கள் நடத்திவரும் தொலைக்காட்சி நிலையங்கள் லைசென்ஸ் இணக்கத்தின் CASP யின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. லைசென்ஸ் இணக்க விதிமுறைகளை மீறுவதை தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் கடுமையாக கருதுவதோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடப்பு சட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.