
புத்ரா ஜெயா , மே 5 – மித்ரா எனப்படும் மலேசிய இந்திய சமூக உருமாற்ற பிரிவு இவ்வாண்டு உதவித் தொகையை பெறவிருப்பவர்கள் குறித்த விவரங்களை இன்று அறிவித்தது. மித்ராவின் சிறப்புக் குழுவின் தலைவரும், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
பி. 40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 10,000 மாணவர்கள் இரண்டாம் ஆண்டு முதல் அவர்களது நான்காவது கல்வி ஆண்டுவரை ஒரு ஆண்டுக்கு 2,000 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இதுதவிர கல்வி அமைச்சிடம் பதிவு செய்துள்ள தமிழ் பாலர் பள்ளிகளின் பி 40 குடும்பங்களைச் சேர்ந்த 4,500 மாணவர்களுக்கு 12 மாதத்திற்கு 200 ரிங்கிட் உதவித்தெகை வழங்கப்படும். 150 ரிங்கிட் பாலர் பள்ளி கல்வி கட்டணமாகவும் 50 ரிங்கிட் உணவு கட்டணமாகவும் வழங்கப்படும் .
மித்ராவின் சமூக திட்டமாக B 40 குடும்பங்களைச் சேர்ந்த கடுமையான நோயினால் டைலசிஸ் மேற்கொண்டுவரும் 900 பேருக்கு உதவித் தொகையாக ஒரு தடவைக்கு 200 ரிங்கிட் உதவித் தொகையென மாதத்திற்கு நான்கு முறை அந்த உதவித் தொகை வழங்கப்படும் என ரமணன் கூறினார்.