Latestமலேசியா

B 50 பிரிவைச் சேர்ந்த கடனாளிகளுக்கு 3 மாத கால வட்டி விலக்கு

கோலாலம்பூர், அக் 13 – B 50 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆதரவு நடவடிக்கையாக மூன்று மாத காலத்திற்கு வட்டி
விலக்களிக்கப்படுவதாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று அறிவித்தார். ஒரு மாதத்திற்கு 5,800 ரிங்கிட்டிகும் குறைவாக மொத்த வருமானம் பெறும் B 40 குடும்பத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கும் இந்த வாய்பு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

3 மாத கால வட்டி விலக்கு வசதியுடன் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை திரும்ப செலுத்துவதற்கான தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு குறைப்பதும் இதில் அடங்கும் என பிரதமர் கூறினார். மேலும் கடன் பெற்றவர்கள் மற்றும் உத்தரவாதமின்றி தனிப்பட்ட கிரெடின் கார்டுகளை வைத்திருப்போர் அவர்களது நிதிச் சுமையை குறைப்பதற்கு குறைந்த வட்டி விகிதத்திற்கும் தகுதி பெறுவார்கள் என இஸமாயில் சப்ரி தெரிவித்தார். நிதி நிர்வாகம் மற்றும் நெருக்கடியிலிருந்து சமாளிப்பதற்கான திட்டத்தை அறிவித்தபோது பிரதமர் இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!