Latestமலேசியா

B40 இந்திய குடும்பங்களுக்கு உதவ மித்ராவின் ‘உணவுப் பெட்டகம்’ திட்டம்

போர்ட் டிக்சன் செப் 5 – தமது அமைச்சின் கீழ் உள்ள  மித்ரா-இந்தியர் உருமாற்றுத் திட்டத்தின் கீழ், தேசிய  ஒருமைப்பாட்டு அமைச்சு  ‘மித்ரா உணவுப் பெட்டகம்’ எனும்  உதவித் திட்டத்தை தொடங்கியுள்ளது.

அந்த திட்டத்திற்கு என 1 கோடியே  24 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருப்பதாக, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்  டத்தோ ஹலிமா மொஹமட் சிடிக் தெரிவித்தார்.

அந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதுமுள்ள  இந்திய தோட்ட  மக்களுக்கு,  அத்தியாவசிய உணவுப்  பொருட்கள் அடங்கிய மித்ரா உணவுப் பெட்டிகள் வழங்கப்படும்.

B40 பிரிவினரைச் சேர்ந்த 73 ஆயிரத்து  883 குடும்பங்களுக்கு  அந்த உணவுப் பெட்டிகளை விநியோகிக்க  அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இவ்வாண்டு ஆகஸ்ட்  14 -ஆம்  தேதி தொடங்கிய அந்த  உதவித் திட்டம் டிசம்பர்  31 –ஆம் தேதி முடிவுறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக , அமைச்சர்  நெகிரி செம்பிலான், போர் டிக்சனிலுள்ள தானா மெரா ஓய்ல் மில் தோட்டம்,  தானா மெரா தோட்டம்,  புக்கிட்  பெலாண்டுக் தோட்டம் ஆகிய  பகுதிகளில் வசிக்கும், B40 பிரிவினரைச் சேர்ந்த  150 குடும்பங்களுக்கு   ‘மித்ராவின் உணவுப் பெட்டி’-களை எடுத்து வழங்கினார்.

அந்த நிகழ்ச்சியில், மாநில ஆட்சி குழு உறுப்பினர்  அருள் குமார் ஜம்புநாதனும் கலந்து கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!