
கோலாலம்பூர், ஜன 16 – B40 குறைந்த வருவாய் பெறும் மக்களுக்கான ரொக்க உதவி , இனி STR – Rahmah ரொக்க நன்கொடை என அறியப்படுமென பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மேலும், மக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக அந்த முதல் கட்ட நன்கொடை, மார்ச்சில் திட்டமிட்டதைக் காட்டிலும், முன்கூட்டிய இந்த மாதம் ஜனவரியிலே வழங்கப்படுமென அவர் கூறினார்.
நாளை முதல் கட்டம் கட்டமாக, அந்த நன்கொடை தகுதி பெற்ற 87 லட்சம் பேரின் பதிவு பெற்ற வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.
அதன் படி 40 லட்சம் குடும்பத் தலைவர்கள் 300 ரிங்கிட்டும், 12 லட்சம் மூத்த குடிமக்களும் துணையில்லாதவர்களும் 100 ரிங்கிட்டும், திருமணம் செய்துக் கொள்ளாத 35 லட்சம் பேர் 100 ரிங்கிட்டும் பெறுவார்கள் என பிரதமர் குறிப்பிட்டார்.