
ஈப்போ, நவம்பர் 9 – பேராக், ஈப்போ, ஜாலான் இஸ்கண்டாரில், BMW ஆடம்பரக் காரின் அடியில் சிக்கிய பாதசாரி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நேற்றிரவு மணி 9.24 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.
பெண் ஒருவர் செலுத்திய BMW கார் ஒன்று, அவ்வழியே நடந்து சென்றுக் கொண்டிருந்த 34 வயது ஹேமானந்த் தமிழ்ச் செல்வனை மோதித் தள்ளியதாக, பேராக் மாநில தீயணைப்பு மீட்ப்புப் படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குனர் சபரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.
அதனால், காரில் அடியில் சிக்கிக் கொண்ட ஹேமானந்த், பலத்த காயங்களுக்கு இலக்கானார். எனினும், காரை செலுத்திய பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
ஹேமானந்தை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள், சிகிச்சைக்காக அவரை மருத்துவ பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.
இரவு மணி 9.58 வாக்கில் மீட்புப் பணி முழுமையாக நிறைவடைந்தது.