ரஷ்யா, செப்டம்பர் -5, அடுத்த மாதம் நடைபெறும் BRICS மாநாட்டில் பங்கேற்குமாறு ரஷ்யா மலேசியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) விடுத்த அந்த நேரடி அழைப்பை தாம் பெருமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டிருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
9-வது கிழக்குப் பொருளாதார ஆய்வரங்கில் பங்கேற்பதற்காக இரு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர், அங்கு அதிபர் புடினுடன் நடத்திய இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது அந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் அமைப்பான BRICS-சில் இணையும் மலேசியாவின் முயற்சியில், இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின், காசான் (Kazan) நகரில் அக்டோபர் 22 தொடங்கி 3 நாட்களுக்கு BRICS உச்சநிலை மாநாடு நடைபெறுகிறது.
ரஷ்யாவும் சீனாவும் தலைமைத் தாங்கும் BRICS அமைப்பில் இணைவதற்கு ஜூலை மாத இறுதியில் மலேசியா அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்தது.