Latestமலேசியா

போதுமான எம்.பிக்களின் ஆதரவை பெரிக்காத்தான் நேசனல் பெற்றுள்ளது-சனுசி

கோலாலம்பூர், ஜன 8 – ஒற்றுமை  அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமான பிரகடனத்தை பெரிக்காத்தான் நேசனல் பெற்றுள்ளதாக கெடா மந்திரிபெசார் டத்தோஸ்ரீ முஹம்மட் சனுசி முகமட் நோர் கூறிக்கொண்டார்.  அந்த  சத்திய பிரமான பிரகடனத்தின் சரியான எண்ணிக்கை மற்றும் இதர மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லையையென சினார் ஹரியான் தகவல் வெளியிட்டுள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமான பிரகடனம் போதுமானதாக  இருக்கிறது. அதற்கான நாளுக்காக காத்திருங்கள் என அவர் கூறியுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க அதன் வெளிப்படையான முயற்சியில் பெரிக்காத்தான் நேசனல் திரட்டியிருக்கும் சத்திய பிரமான பிரகடனம் குறித்து  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது முஹம்மட் சனுசி தெரிவித்தார்.  

சத்திய பிரமான பிரகடனத்தை செய்துள்ள  பெரிக்காத்தான் நேசனலின் 118 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேட்டி வழங்குவதற்கு மாட்சிமை தங்கிய பேரரசர்   அனுமதி  வழங்கியிருப்பதாக வெளியான தகவலை எதிர்க்கட்சி தலைவரான  டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் அலுவலகம் நேற்று முன் தினம் மறுத்திருந்தது. நாட்டை காப்பாற்றும் முயற்சிக்காக பேரரசருக்கு தனது  நன்றியை தெரிவித்த பெரிக்காத்தான் நேசனசல், அவரது   அனுமதியை பெற்றதாக தெரிவித்த அறிக்கை  சனிக்கிழமையன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. அன்வாரையும் அவரது கூட்டணி அரசாங்கத்தையும்  கவிழ்ப்பதற்காக கடந்த வாரம் துபாயில் நடைபெற்ற சதித்திட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சமூக மேம்பாட்டுத்துறையின் துணை இயக்குனர் டத்தோ இஸ்மாயில் யூசோப்  தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!