
கோலாலம்பூர், ஜன 6 – C4 எனப்படும் லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பது மற்றும் வேண்டியர்களுக்கு சலுகை காட்டுவதற்கு எதிரான இயக்கமான C4-இன் நிர்வாக இயக்குனர் பதவியிலிருந்து Cynthia Gabriel விலகினார். சிந்தியாவுக்கு பதில் இடைக்கால நிர்வாக அதிகாரியாக தனியார் விசாரணையாளரான
Pusphan Murugiah நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏழு ஆண்டு காலமாக லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பதில் சிறந்த பங்கை ஆற்றிய சிந்தியாவுக்கு C4 அமைப்பு நன்றியையும் பாரட்டுதலையும் தெரிவித்தக்கொண்டது. அவர் இயக்கத்தின் ஆலோசகராக தொடர்ந்து பணியாற்றுவார் என்பதோடு இயக்குனர் வாரியத்திலும் தொடர்ந்து இருந்துவருவார் என C 4 இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் லஞ்ச ஊழலுக்கு எதிராக போராடிய சிறந்த 8 பேரில் சிந்தியாவும் ஒருவர் என கடந்த 2021-ஆம் ஆண்டு அமெரிக்க சட்டத்துறை பெயர் குறிப்பிட்டது.