Latestமலேசியா

Allah பதம் காலுறை சர்ச்சையை மிகைப்படுத்தாதீர் பேரரசர் வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 27 – Allah பதம் கொண்ட காலுறை சர்ச்சையை மிகைப்படுத்த வேண்டாம் என மாட்சிமை தங்கிய பேரரசர் Sultan Ibrahim அனைத்து தரப்பினருக்கும் அறைகூவல் விடுத்துள்ளார். அல்லாஹ்வின் பெயரைக் கொண்ட காலுறை விவகாரத்தை அனைத்து தரப்பினரும் சாதகமாக பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளளும்படி அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தை இப்போது அதிகாரிகளிடம் விட்டுவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன், எனவே எந்த தரப்பினரும் தொடர்ந்து கோபத்தைத் தூண்ட வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்தார்.

தண்டிப்பதற்காக மட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக அனைத்து மலேசியர்களும் இந்த உணர்ச்சிப்பூர்வமாக விவகாரத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு மலேசியர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதை ஒரு நினைவூட்டலாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என பேரரசர் சுட்டிக்காட்டினார். இந்த சம்பவத்தை ஒரு பாடாமாக கற்றுக்கொண்டு , ஒற்றுமையை வலுப்படுத்த அனைவரும் பாடுபட வேண்டும் என பேரரசர் கேட்டுக்கொண்டார். தொடர்ச்சியான கோபத்தால் எந்தப் பலனும் இல்லை. அனைத்துக் கட்சிகளும், குறிப்பாக சமூகத் தலைவர்களும் முதிர்ச்சியுடனும் விவேகத்துடனும் ன் செயல்பட வேண்டும். பிரிவினையை புறக்கணித்துவிட்டு ஒற்றுமையை நோக்கி மக்களை வழிநடத்துவோம். பன்முகத்தன்மை கொண்ட நமது சமூகத்தில் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாகும் என்பதோடு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என இன்று வெளியிட்ட அறிக்கையில் பேரரசர் Sultan Ibrahim வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!