Latestமலேசியா

Chini ஏரிப் பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை நிறுத்துமாறு SAM வலியுறுத்து    

கோலாலம்பூர், ஜூன்  11- நாட்டின் இரண்டாவது பெரிய இயற்கை ஏரியான பகாங்,பெக்கானில் உள்ள Tasik Chini ஏரியைச் சுற்றி மேற்கொள்ளப்படும், சுரங்கத் தொழில் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தும்படி, Sahabat Alam Malaysia அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

மாநில அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, அந்த ஏரியின்  இயற்கை வளத்தையும், சுற்று சூழலையும் பாதுகாக்க முடியுமென , அவ்வமைப்பின்  தலைவர்  மீனாட்சி ராமன் தெரிவித்தார்.

ஈராண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படத்தை  சுட்டிக் காட்டி Tasik Chini  மாசடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் தொடர்பில், பலர் பல்வேறான கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இவ்வேளையில் அந்த தகவலை பகாங் மாநில சுற்றுச் சூழல் துறை  மறுத்திருக்கின்றது . Tasik Chini-யின் நீர் தூய்மையாக இருப்பதாகவும், அதில்  வாழும் உயிரினங்களுக்கு பாதுகாப்பானதாக உள்ளதாகவும் அத்துறை தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!