Latestமலேசியா

சாகும் வரை தன்னைத் தூக்கிலிடுமாறு மலாக்காவில் குற்றவாளியே நிதிபதியிடம் கதறிய விநோதம்

ஆயர் குரோ, மார்ச் 27 – “என்னை சாகும் வரை தூக்கிலிடுங்கள். அது போதும்” என குற்றவாளி கூண்டில் நின்ற ஆடவரே நீதிபதியிடம் முறையிட்ட சம்பவம் மலாக்கா ஆயர் குரோ உயர் நீதிமன்றத்தில் நடந்தேறியது.

ஆறாண்டுகளுக்கு முன்னர் 2.7 கிலோ கிராம் எடையிலான போதைப்பொருளை விநியோகித்த குற்றத்தை ஒப்புக் கொண்டு, Ng Chan Keong எனும் அவ்வாடவர் நீதிபதியிடம் அவ்வாறு முறையிட்டார்.

எனினும், தண்டனையை முடிவு செய்வது நீதிமன்றத்தின் உரிமை எனக் கூறிய நீதிபதி Datuk Anselm Charles Fernandis, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 12 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தார்.

அவர் கைதான நாளான 2018 அக்டோபர் 2-ல் இருந்து சிறைக்காலம் தொடங்கும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

இவ்வேளையில், நீதிமன்றத்தின் வெளியே குற்றவாளியின் குடும்ப உறுப்பினர் என நம்பப்படும் பெண்ணொருவர் அங்கு செய்தி சேகரித்த ஊடகங்களிடம் சற்று அடாவடியாக நடந்துக் கொண்டு சலசலப்பை ஏற்படுத்தினார்.

குற்றவாளியைப் புகைப்படம் எடுப்பதில் இருந்து தடுத்ததோடு, பத்திரிக்கையாளர்களிடம் தகாத வார்த்தைகளை அவர் திட்டினார்.

அவரை அங்கிருந்த போலீசார் சமாதானப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!