Latestமலேசியா

Chow Kit சந்தைக்கு வருகை புரிந்த ஜோகோவிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது

தலைநகர், ஜாலான் ராஜா அலாங்கிலுள்ள, பிரபல செள கிட் சந்தைக்கு வருகை புரிந்த, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோவோவிற்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

ஜோகோவி என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அவரை காண, இந்தோனேசியர்கள் பலர் அங்கு அதிகாலை தொடங்கி காத்திருந்தனர்.

அவர் சந்தைக்கு வருகை புரிந்த போது, செள கிட் மற்றும் கம்போங் பாரு பகுதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தோனேசியர்கள், “பாக் ஜோகோவி” என கோஷமிட்டதோடு, அவருக்கு மரியாதை வழங்கும் விதமாக தங்கள் நாட்டுப்பண் பாடலையும் பாடினர்.

மலேசியாவுக்கு இரு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜோகோவி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடன் இருக்க, தலைநகரில், இந்தோனேசியர்கள் அதிகம் வேலை செய்யும் பிரபல செள கிட் சந்தைக்கு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!