Latestஉலகம்

CNN மூத்த செய்தியாளர் ஹிஜாப் அணியவில்லை ; ஈரானிய அதிபர் நேர்காணலில் பங்கேற்க மறுப்பு

செப் 13- அமெரிக்கா, நியூ யார்க்கில், CNN செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்பதை ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி இரத்துச் செய்தார்.

அந்த நேர்காணலை வழிநடத்தவிருந்த CNN செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளர் Christiane Amanpour, ஹிஜாப் அணிய மறுத்ததை அடுத்து அந்த நேர்காணல் இரத்து செய்யப்பட்டது.

ஈரானில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயது மாசா அமினி எனும் இளம் பெண் கடந்த வாரம் மரணமடைந்த சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வலுத்துள்ளன.

குறிப்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஹிஜாப்களை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த ஆர்பாட்டங்களில் இதுவரை குறைந்தது எண்மர் கொல்லப்பட்டது ஆகியவை குறித்து, நேர்காணலின் போது அதிபர் ரைசியிடம் தாம் கேட்க காத்திருந்த சமயத்தில் நேர்காணல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, Christiane Amanpour தமது டுவிட்டர் சமூக அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக, நேர்காணல் தொடங்க 40 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த சமயத்தில், அங்கு வந்த அதிபரின் ஆதரவாளர் ஒருவர், தம்மை ஹிஜாப் அணியுமாறு கேட்டுக் கொண்டதாக, Christiane குறிப்பிட்டுள்ளார்.

இது முஹாராம் புனித மாதம் என்பதால், ஹிஜாப் அணிவது அவசியமென தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக Christiane கூறினார்.

அதனை நல்லபடியாக நிராகரித்ததாக கூறும் Christiane Amanpour, நேர்காணல் நடைபெறுவது அமெரிக்காவில், இங்கு ஹிஜாப் அணிவது குறித்து எந்த ஒரு விதிமுறையும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தியதாக சொன்னார்.

இதற்கு முன் தாம் நேர்காணல் செய்த ஈரானிய அதிபர்கள் யாரும் அதுபோன்ற கோரிக்கைகளை தம்மிடம் முன் வைத்ததில்லை என்றாரவர்.

எனினும், தாம் ஹிஜாப் அணியாவிட்டால், நேர்காணல் நடத்தப்படாது என, அதிபரின் ஆதரவாளர் கூறினார்.

அவரது அந்த திடீர் கோரிக்கையை ஏற்க முடியாது என தாம் கூறியதை அடுத்து, அந்நபர் அங்கிருந்து அகன்றதாக Christiane Amanpour குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!