
Goldplay நிகழ்ச்சி, நவம்பர் மாதம் 22-ஆம் தேதி, தலைநகர், புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவுள்ளது.
ஹரிமாவ் மலாயா, இவ்வாண்டுக்கான ஆசியக் கிண்ண தகுதி சுற்று ஆட்டத்தை, அதற்கு முந்தைய நாள் நவம்பர் 21-ஆம் தேதி, புக்கிட் ஜாலில் அரங்கில் நடத்த திட்டமிட்டால், காற்பந்து இரசிகர்களுக்கு வரையறுக்கப்பட்ட இருக்கைகளை மட்டுமே இதுக்க முடியுமென கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் ஏழாம் தேதி, AFF கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் மலேசியா தாய்லாந்தை எதிர்கொண்ட போது, Jay Chou இசைநிகழ்ச்சி காரணமாக, 21 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.
எனவே, அவ்விவகாரத்திற்கு தீர்வுக் காண, இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ள வேளை ; விரைவில் MSC – அரங்க கூட்டமைப்புடன் சந்திப்பு நடத்தப்படுமென, FAM – மலேசிய காற்பந்து சங்கத் தலைவர் டத்தோ ஹமிடின் அமின் தெரிவித்தார்.
FIFA நாள்காட்டி படி, ஹரிமாவ் மலாயா ஆட்டங்களுக்கு இடம் ஒதுக்கித் தரப்பட வேண்டுமென, அரங்க கூட்டமைப்புடன், FAM ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளது.
எனினும், இடம் தொடர்பான இடையூறுகள் வழக்கமானால், அந்த ஒப்பந்தம் செய்துக்.கொண்டதில் அர்த்தம் இல்லை எனவும் ஹமிடின் குறிப்பிட்டார்.