கோலாலம்பூர், ஜூலை 16 – தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் உள்ள நகைச்சுவை மன்றத்தில் நகைச்சுவை செய்தபோது இஸ்லாத்தை சிறுமைப்படுத்தியதற்காக ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்ட நகைச்சுவை கலைஞர் சித்தி நுராமிரா அப்துல்லா ( Siti Nuramira Abdulah ) மீது ஷரியா நீதிமன்றத்தில் மீண்டும் குற்றச்சாட்டு கொண்டுவரும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என Sisters in Islam மகளிர் உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Siti Nuramira Abdullah மீது ஷரியா நீதிமன்றத்தில் கூட்டரசு பிரதேச சமய மன்றம் மீண்டும் குற்றச்சாட்டை கொண்டுவருவதை அரசாங்கம் தடுக்க வேண்டும் என Sisters in Islam வலியுறுத்தியது.
இஸ்லாத்தை சிறுமைப்படுத்தியதாக அந்த நகைச்சுவை கலைஞர் மீது ஷரியா நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என சமய விவகார துணையமைச்சர் Ahmad Marzuk Shaary வெளியிட்டிருந்த அறிக்கை குறித்து அந்த அமைப்பு தனது கருத்தை வெளியிட்டது. மீண்டும் Siti Nuramirah Abdullah மீது குற்றச்சாட்டு கொண்டுவரும் முடிவு வரி செலுத்துவோரின் பணத்திற்கு விரயம் ஏற்படுத்துவதாகும் என Sisters in Islam சுட்டிக்காட்டியது.