Latestஉலகம்

Covid-19 பரவலைக் கட்டுப்படுத்தத் தவறினர்; திபெத்தில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி நீக்கம்

திபெத், ஆகஸ்ட் 29 – சீனாவின் திபெத் (Tibet)தில் Covid-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது அவர்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

சீனாவில் நேற்று முந்தினம் அறிவிக்கப்பட்ட 1,300 Covid-19 நோய்த்தொற்று சம்பவங்களில் ஏறக்குறைய 500 சம்பவங்கள், திபெத்தில் பதிவாகியுள்ளன.

மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது, சீனாவில் பதிவாகும் Covid-19 நோய்ப் பரவல் சம்பவங்களின் எண்ணிக்கை அவ்வளவு அதிகம் இல்லை தான். இருந்தாலும் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த அந்நாடு கடைபிடித்து வரும் கடுமையான விதிமுறைகளின் அடிப்படையில் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய்ப்பரவல் அதிகரிக்கும் அளவுக்குக் கவனக் குறைவாக நடந்து கொண்டிருப்பது, விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாதது போன்றவற்றுக்காக அந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!