Latestமலேசியா

Cradle Fund தலைமை செயல் அதிகாரி கொலை வழக்கு தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் மேல் முறையீடு

ஷா அலாம், ஜூன் 23 – தமது கணவரும் Cradle Fund தலைமை செயல் அதிகாரியுமான Nazrin Hassan னை நான்கு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து Samirah MUzaffar மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளை ஷா ஆலாம் உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் மேல் முறையீடு செய்துள்ளது. இதனை சட்டத்துறை தலைவர் Idris Harun இன்று உறுதிப்படுத்தினார். நேற்று இணையத்தின் மூலம் மேல் முறையீட்டிற்காக மனு தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தரப்பு துணை வழக்கறிஞர் Tengku Intan Suraya Tengku Ismail தெரிவித்தார். உயர்நீதிமன்றத்தின் முடிவை ரத்து செய்வதற்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவை சமர்ப்பிப்பதற்கு 14 நாள் கால அவகாசம் இருப்பதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!